அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனமானது, 600 மெகாவாட் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய காற்றாலை-சூரியசக்தி ஆகிய இரண்டையும் கொண்ட ஒரு கலப்பின மின் உற்பத்தி நிலையத்தினை ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் அமைத்துள்ளது.
இது 600 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் மற்றும் 150 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை ஆலை ஆகியவற்றினை உள்ளடக்கியது.
இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளில் ஒன்றான கமுதி சூரிய சக்தி மின் நிலையத்தினை இயக்குகிறது.