உலகின் முதலாவது துவரம்பருப்பு உற்பத்தி விரைவாக்க நெறிமுறை
February 26 , 2024 538 days 458 0
பகுதியளவு வறட்சியான வெப்ப மண்டலத்திற்கான சர்வதேசப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) ஆனது உலகின் முதல் துவரம்பருப்பு உற்பத்தி விரைவாக்க நெறி முறையை அறிவித்துள்ளது.
இந்த புதிய துவரம்பருப்பு உற்பத்தித் திட்டம் ஆனது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வறண்ட நிலங்களில் உணவுப் பாதுகாப்பைக் கொண்டு வருவதில் முக்கியமானதாக இருக்கும்.
இதன் மூலம் சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும் இந்தப் பயிரின் வளர்ப்பு காலச் சுழற்சியை இரண்டு முதல் நான்கு ஆண்டுகளாக குறைக்கலாம்.
துவரம் பருப்பானது அடிப்படையில் ஆறு-முதல் ஒன்பது மாதம் வரை வளர்ச்சி காலம் கொண்ட பயிர் ஆகும்.
அறிவியலாளர்கள் இந்தத் தாவரத்தின் வளர்ச்சிக் காலத்தினை மிக வெற்றிகரமாக கட்டுப்படுத்தி, முன்கூட்டியே பூக்களைப் பூக்கச் செய்தனர்.
துவரம் பருப்பில் குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினைக் கொண்டுள்ளது.
மேலும் இதில் தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் B-6, ஃபோலேட், வைட்டமின் A, கால்சியம், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக உள்ளது.