உலகின் முதலாவது தூய்மையான அணு உலை
July 27 , 2021
1476 days
676
- சீன அரசின் அறிவியலாளர்கள், குளிரூட்டலுக்கு என்று நீரைப் பயன்படுத்தாத ஒரு சோதனை முறை அணு உலை பற்றியத் திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
- இந்த உலையானது யுரேனியத்திற்கு பதிலாக திரவ தோரியத்தைக் கொண்டு இயங்கும்.
- இது பயன்பாட்டிலுள்ள அணு உலைகளை விட பாதுகாப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- இந்த வகை அணு உலைக்கு நீர் தேவைப்படுவதில்லை என்பதால் இதனைப் பாலைவனத்திலும் செயல்படச் செய்ய இயலும்.
- சாங்காய் செயல்முறைசார் இயற்பியல் நிறுவனத்தின் குழுவினர் இந்த முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
Post Views:
676