உலகின் முதலாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் மாதிரி
November 9 , 2018 2461 days 848 0
சாம்சங் நிறுவனமானது உலகின் முதலாவது மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போனின் முன்மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை திறக்கும்போது சட்டைப்பை அளவுடைய வரைபட்டிகை (Tablet) ஆக மாறுகிறது.
சாம்சங் நிறுவனமானது இந்த மடக்கக் கூடிய தொலைபேசி தொழில்நுட்பத்தை ‘Infinity flex display’ அல்லது முடிவற்ற தன்மையை உடைய சாதகமான காட்சிப் படுத்துதலைக் கொண்டது எனக் கூறுகின்றது.
இந்தச் சாதனம் மூடிய நிலையில் சாதாரணமான கைபேசி போன்று காட்சியளிக்கும். திறந்த நிலையிலிருக்கும்போது இது 7.3 அங்குல அளவிலான புத்தகம் போன்று திறக்கிறது.
இது இதுவரையில் வெளிவந்துள்ள கைபேசி திரைகளில் மிகப்பெரிய அளவைக் கொண்ட கைபேசிகளில் ஒன்றாகும்.