அபுதாபியின் ஷேக் கலீஃபா மருத்துவ நகரம் ITVISMA மரபணு சிகிச்சையை வழங்கிய உலகின் முதல் மருத்துவமனையாக மாறியது.
முதுகெலும்பு தசைச் சிதைவு (SMA) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டது.
ITVISMA என்பது நோவார்டிஸ் நிறுவனம் உருவாக்கிய ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய மரபணு சிகிச்சையாகும்.
இது குறைபாடுள்ள SMN1 (சர்வைவல் மோட்டார் நியூரான் 1) மரபணுவை மாற்றுவதன் மூலம் செயல்படுகிறது, இதனால் உடல் SMN (சர்வைவல் மோட்டார் நியூரான்) புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆனது ITVISMA சிகிச்சையை அங்கீகரித்ததுடன், அமெரிக்காவிற்குப் பிறகு இந்த சிகிச்சையை அங்கீகரித்த இரண்டாவது நாடாக மாறி உள்ளது.