TNPSC Thervupettagam

உலகின் முதல் ஆற்றல் உற்பத்தி தீவு

September 14 , 2026 15 hrs 0 min 14 0
  • கடல்சார் காற்றாலை மின்சாரத்தை ஆதரிப்பதற்காக, பெல்ஜியம் அதன் கடற்கரையிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள வட கடலில் உலகின் முதல் செயற்கை ஆற்றல் தீவைக் கட்டி வருகிறது.
  • பிரின்சஸ் எலிசபெத் தீவானது, 3.5 ஜிகாவாட் (GW) கடல்சார் காற்றாலைத் திறனைக் கொண்டிருக்கத் திட்டமிடப்பட்டுள்ள பிரின்சஸ் எலிசபெத் மண்டலத்திற்கான ஆற்றல் மையமாகச் செயல்படும்.
  • இது கடல்சார் காற்றாலைகளிலிருந்து மின்சாரத்தைச் சேகரித்து, கடலடி வடங்கள் மூலம் பெல்ஜியத்தின் பிரதான நிலப்பரப்பிற்கு கடத்தும்.
  • இந்தத் தீவானது பிரிட்டன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடனான இணைப்புகளையும் கொண்டிருக்கும். இது வட கடலின் கடல்சார் காற்றாலைப் பண்ணைகளை இணைக்கும்.
  • இதன் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது 2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்