உலகின் முதல் ஆளில்லாத விமானத்துடன் கூடிய மீட்பு திட்டம்
January 20 , 2018 2845 days 993 0
நியூ சவுத் வேல்ஸின் பொங்கி எழும் அலைகளில் மாட்டிக் கொண்ட சில நீச்சல் வீரர்களை காப்பாற்ற ஆஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவனத்தால் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட சிறிய கிழிப்புரக ஆளில்லா விமானம் (Little Ripper unmanned aerial vehicle) என்று அறியப்படும் இந்த விமானம் வரும் கோடைக் காலங்களில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் ஆரம்பிக்கப்பட இருக்கும் சுறாமீன் கண்டுணர் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
இது சுறாமீன்களை தன்னிச்சையாக கண்டுணர அல்கோரிதம் (Algorithm) என்ற வழிமுறையைப் பயன்படுத்துகிறது.
இந்த சம்பவம் உலகில் முதன்முறையாக நீரில் உயிர்காக்கும் நடவடிக்கைக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியமையை குறிப்பிடுகின்றது.