TNPSC Thervupettagam

உலகின் முதல் கார்பன் வரம்பு வரி

July 23 , 2021 1465 days 591 0
  • ஐரோப்பிய ஒன்றியமானது 2026 ஆம் ஆண்டு முதல் உலகில் முதன்முதலாக கார்பன் வரம்பு வரியை விதிக்க உள்ளதற்கான ஒரு முன்மொழிதலை வெளியிட்டுள்ளது.
  • இது கார்பன் வரம்பினை சரி செய்தல் முறையின் மூலம் கார்பன் உமிழ்வின் மீதான செலவைக் கண்காணிக்கும்.
  • இந்த முறையானது இறக்குமதி செய்யப்பட்ட எஃகு, அலுமினியம், உரம் மற்றும் சிமெண்ட் போன்ற தயாரிப்புப் பொருட்கள் மீதான கார்பன் விலைக்கான வரியினை விதிக்கும்.
  • இந்தக் கொள்கையானது நாடுகளை இலக்காகக் கொள்ளாமல் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வரி விதிக்க உள்ளது.
  • ஆனால் இக்கொள்கையானது ரஷ்யா போன்ற தனது முக்கிய வர்த்தகப் பங்கு தாரர்களிடமிருந்து வலுவான பதிலடியைத் தூண்டியுள்ளது.
  • ரஷ்ய நாடானது நிலக்கரி, எண்ணெய், சுருள் எஃகு (rolled steel) மற்றும் அலுமினியம் போன்ற கார்பனை அதிகமாகக் கொண்ட பொருட்களை ஐரோப்பிய நாட்டிற்கு அதிகளவில் வழங்கி வரும் ஒரு நாடாக திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்