TNPSC Thervupettagam

உலகின் முதல் நுண்திரவ DAP உரம்

May 3 , 2023 828 days 479 0
  • மத்திய உள்துறை அமைச்சர், டெல்லியில் "உலகின் முதல் நுண்திரவ DAP (டை-அமோனியா பாஸ்பேட்) உரத்தினை" அறிமுகம் செய்தார்.
  • இது இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டது.
  • விவசாயிகளுக்கு ஆகும் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், இரசாயன உரங்களைத் தவிர்க்கவும் உதவும் என்பதால் இது ஒரு புரட்சிகரப் பொருளாகப் புகழப்படுகிறது.
  • ஒரு 500 மில்லி அளவு கொண்ட கொள்கலனில் உள்ள திரவ DAP உரத்தில் 8% நைட்ரஜன் மற்றும் 16% பாஸ்பரஸ் உள்ளது.
  • இது வழக்கமாகப் பயன்படுத்தப் படுகின்ற 50 கிலோ எடை கொண்ட DAP உர மூட்டைக்கு ஈடானதாக அமையும்.
  • இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனமானது அதன் நுண் யூரியா மற்றும் நுண் DAP மீது காப்புரிமையினைப் பெற்றுள்ளது.
  • இந்தக் கூட்டுறவு நிறுவனமானது அடுத்த 20 ஆண்டுகளுக்கு வேண்டி இந்தத் தயாரிப்புக்களுக்கான பங்கு வீத உரிமையினைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்