உலகின் முதல் பனை ஓலை கையெழுத்துப் படிவ அருங்காட்சியகம்
January 9 , 2023 992 days 940 0
உலகின் முதல் பனை ஓலை கையெழுத்துப் படிவ அருங்காட்சியகத்தினை நவீன ஒலிப்பதிவு மற்றும் காட்சிப்பதிவுத் தொழில்நுட்பத்தின் மூலமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் திறந்து வைத்தார்.
"உலகின் முதல் பனை ஓலை கையெழுத்துப் படிவ அருங்காட்சியகம்" என புகழப் படும் இந்த அருங்காட்சியகமானது, கேரள வரலாறு மற்றும் பாரம்பரியத் தளங்கள் அருங்காட்சியகத்துடன் இணைந்து ஆவணக் காப்பகத் துறையால் நிறுவப் பட்டது.
இந்த அருங்காட்சியகமானது, 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் 650 ஆண்டுகள் நீடித்த திருவிதாங்கூர் அரசின் நிர்வாக, சமூக-கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்களின் சுவாரசியமானத் தகவல்களின் ஒரு களஞ்சியமாகும்.
இது அருங்காட்சியகமாக மாறுவதற்கு முன்பு வரையில் 1887 ஆம் ஆண்டிலிருந்து மத்திய வட்டார மொழி ஆவணக் காப்பு அலுவலகமாக விளங்கியது.