TNPSC Thervupettagam

உலகின் முன்னணி மீத்தேன் மையங்கள்

August 1 , 2026 23 days 112 0
  • உலகெங்கிலும் உள்ள நெல் வயல்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) வெளியேற்றம் 1960-களில் இருந்து இருமடங்காகியுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள நெல் வயல்கள் ஆண்டுதோறும் சுமார் 1.1 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையான (CO2-e) வாயுவை வெளியிடுகின்றன என்ற நிலையில் இது 1961 மற்றும் 1980-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டு வெளியேற்றத்தை விட 90.4% அதிகமாகும்.
  • இந்தியாவின் நெல் வயல்கள் தற்போது உலகின் முன்னணி மீத்தேன் மையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.
  • இது ஜெர்மனியின் மொத்த ஆண்டு மீத்தேன் வெளியேற்றத்தை விட அதிகமாக இருந்தது.
  • மேலும், கிழக்கு இந்தியாவில் உள்ள நெல் வயல்கள் உலகளாவிய மீத்தேன் மையங்களில் ஒன்றாக இருந்தன.
  • மண்ணின் கரிம கார்பனைத் தவிர, நெல் வயல்களில் இருந்து வெளியேறும் மீத்தேனும் இந்த வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
  • நீர் நிரம்பிய வயல்களில் குறைந்த ஆக்சிஜன் சூழல் உருவாகிறது, அங்கு மீத்தேன் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரிகள் செழித்து வளர்கின்றன.
  • 2025-26-ஆம் ஆண்டில் 154 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்து, அரிசி உற்பத்தியில் இந்தியா நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
  • 1970-களிலிருந்து நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவும் சுமார் 25% அதிகரித்துள்ளதுடன், தற்போது இந்தியாவின் மானாவாரி அறுவடைப் பரப்பில் 55%-ஐ இது உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்