TNPSC Thervupettagam

உலகின் விலங்கு சுகாதார அறிக்கை

May 29 , 2025 10 days 80 0
  • உலகின் விலங்குகள் சுகாதார அறிக்கையின் முதல் நிலை அறிக்கையினை உலக விலங்கு சுகாதார அமைப்பு (WOAH) வெளியிட்டுள்ளது.
  • தொற்றக்கூடிய விலங்கு நோய்கள் இது வரையில் பாதிக்கப்படாத பகுதிகள் மற்றும் உயிரினங்களுக்கும் பரவி வருகின்றன.
  • இதில் கிட்டத்தட்டப் பாதியளவு நோயானது (47 சதவீதம்) விலங்குகளுக்கு இடையில் பரவும் திறன் கொண்டவையாக உள்ளன.
  • மீன் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் கொல்லி/எதிர்ப்பிகளில் சுமார் 15.8% ஃப்ளோரோக்வினொலோன்கள் ஆகும்.
  • விலங்குகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக வேண்டி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதாக சுமார் 20% நாடுகள் தெரிவித்துள்ளன மேலும் 7% நாடுகள் கொலிஸ்டின் மற்றும் என்ரோஃப்ளோக்சசின் போன்ற அதிக முன்னுரிமை மிக்க சில மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.
  • 2050 ஆம் ஆண்டிற்குள், நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு (AMR) தன்மையானது சுமார் 2 பில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மற்றும் 100 டிரில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவியப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்