ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் உலகின் விலை குறைந்த சாதனம் - பார்த்
February 13 , 2020 2013 days 694 0
இந்தத் துப்பாக்கிக் குண்டு துளைக்காத தலைக் கவசமானது ‘ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் தலைக் கவசம்’ என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருகின்றது.
இந்தச் சாதனத்தின் பெயர் ‘பார்த்’ ஆகும்.
இந்திய இராணுவத்தின் இராணுவ பொறியியல் கல்லூரியானது ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு வரும் இதே வகையைச் சேர்ந்த சாதனங்களை விட இவற்றின் விலை மிகவும் குறைவாகும்.
இந்தச் சாதனமானது 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின் போது காட்சிப் படுத்தப்பட்டது.
ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் சாதனம் என்பது துப்பாக்கி சுடும் இடம் மற்றும் சென்சார்கள் (உணர்விகள்) போன்ற பிற ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு அமைப்பாகும்.