TNPSC Thervupettagam

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான குடிசைப் பகுதிகள்

July 31 , 2025 3 days 11 0
  • 2024 ஆம் ஆண்டு மூடிஸ் அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
  • இந்த ஆய்வு 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நேச்சர் சிட்டிஸ் என்ற இதழில் வெளியிடப் பட்டது.
  • இந்தியாவில், 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடலோர அல்லது நதி சார் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
  • வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஆன குடிசைப் பகுதிகள் இந்தியாவில் உள்ளன.
  • இந்தியாவில் சுமார் 158 மில்லியனுக்கும் அதிகமான குடிசைவாசிகள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படக் கூடிய குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
  • இது ரஷ்யாவின் மக்கள்தொகையை விட அதிகம் ஆகும் .
  • மேலும் அவற்றுள் பெரும்பாலானவை கங்கை நதி டெல்டாவில் குவிந்து உள்ளன.
  • அத்தகைய மக்கள்தொகையில் மிகப்பெரியதான செறிவும் அதிக எண்ணிக்கையும் தெற்காசிய நாடுகளில் உள்ளன.
  • முழுமையான எண்ணிக்கையில் வட இந்தியா முன்னணியில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளன.
  • மற்ற குறிப்பிடத்தக்க அளவில் 'அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில்' ருவாண்டா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், வடக்கு மொராக்கோ மற்றும் ரியோ டி ஜெனிரோவின் கடலோரப் பகுதிகள் அடங்கும்.
  • உலகளாவிய தெற்குப் பகுதியில், 67,568 தொகுப்பு/திரள்களின் 908,077 வீடுகளில் வசிக்கும் சுமார் 445 மில்லியன் மக்களை உள்ளடக்கிய குடியிருப்புகள் ஒட்டு மொத்த அளவில் 33% முறைசாரா குடியேற்றங்கள் ஆகும்.
  • அவை ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.
  • இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் விகிதாச்சாரத்தில் அதிக எண்ணிக்கையிலான வெள்ளப்பெருக்கு குடியிருப்புகள் உள்ளன.
  • இங்கு ஆராய்ச்சியாளர்கள் கிராமப்புறம், புறநகர் மற்றும் நகர்ப்புறம் என மனிதக் குடியிருப்புகளை வகைப்படுத்தினர்.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் மிகவும் அதிக நகரமயமாக்கல் விகிதங்களை (80%) கொண்டிருந்தன.
  • இதனால், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடியேற்றங்கள் நகர்ப்புறங்களில் இருந்தன.
  • இதற்கு மாறாக, ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் மிகக் குறைந்த நகரமயமாக்கல் விகிதங்கள் இருந்தன என்பதோடு மேலும் சுமார்  63% முறைசாரா குடியேற்றங்கள் அங்கு கிராமப்புறங்களாக இருந்தன.
  • சியரா லியோன் மற்றும் லைபீரியாவில் உள்ள முறைசாரா குடியேற்றங்கள் பெரும்பாலான மக்களைக் கொண்டிருந்தன.
  • இந்தியாவில், ஆய்வின் போது, 40% குடிசைவாசிகள் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வந்தனர்.
  • இந்தியா மற்றும் வங்காளதேசத்தில், தாழ்வான கங்கை டெல்டா மற்றும் பெரிய அளவிலான தேசிய மக்கள் தொகை இந்த எண்ணிக்கைக்குப் பங்களிக்கின்றன.
  • வேலை வாய்ப்பு, சமூகப் பாதிப்புகள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல காரணிகளால் மக்கள் வெள்ளப்பெருக்குப் பகுதிகளில் குடியேறுகிறார்கள் அல்லது குடியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்