உலகிலேயே 'அதிகக் குற்றங்கள் நிறைந்த நாடுகள்' தரவரிசை
April 17 , 2023 747 days 410 0
உலகப் புள்ளிவிவரங்கள் என்ற அமைப்பானது, உலகிலேயே 'அதிகக் குற்றங்கள் நிறைந்த நாடுகள்' என்ற தரவரிசையைப் பகிர்ந்துள்ளன.
இந்தப் பட்டியலில், வெனிசுலா முதலிடத்திலும், பப்புவா நியூ கினியா (2), ஆப்கானிஸ்தான் (3), தென்னாப்பிரிக்கா (4), ஹோண்டுராஸ் (5) ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
குற்றவியல் தரவரிசையில் இந்தியாவை விட அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை முன்னணியில் உள்ள நிலையில் இந்தியா இதில் 77வது இடத்தினைப் பெற்று உள்ளது.
உலகப் புள்ளிவிவரங்கள் அமைப்பின் தகவலின் படி, அமெரிக்கா 55வது இடத்திலும், ஐக்கியப் பேரரசு 65வது இடத்திலும் உள்ளன.
92வது, 100வது மற்றும் 135வது ஆகிய இடங்களில் உள்ள துருக்கி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே குறைவான குற்றங்கள் பதிவான சில நாடுகளாக உள்ளன.