உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏதுவான நகரங்கள் குறித்த பொருளாதார வல்லுநர்களின் வருடாந்திர ஆய்வறிக்கை
June 13 , 2021 1617 days 635 0
2021 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையின் படி கோவிட்-19 பெருந்தொற்றானது வாழ்வதற்கு ஏதுவான நகரங்களின் தரநிலையை உலுக்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றைக் கையாள்வதில் மேற்கொண்ட வெற்றிகரமான அணுகுமுறைகளின் காரணமாக 2021 ஆம் ஆண்டில் மிகவும் வாழ்வதற்கு ஏதுவான நகரமாக நியுசிலாந்தின் ஆக்லாந்து திகழ்கிறது.
இதனைத் தொடர்ந்து,
ஜப்பானில் ஒசாகா மற்றும் டோக்கியோ,
ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட்,
நியூசிலாந்தின் வெல்லிங்டன் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிரியாவின் உள்நாட்டுப் போர் காரணமாக டமாஸ்கஸ் நகரில் வாழ்க்கை நிலையானது மிகவும் கடினமானதாக உள்ளது.
ஆஸ்திரியாவின் வியன்னா நகரமானது தற்போது 12வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
அது 2018-20 ஆகிய ஆண்டுகளில் உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏதுவான நகரமாக திகழ்ந்தது