TNPSC Thervupettagam

உல்லாஸ் (ULLAS) திட்டம் - லட்சத்தீவு

October 17 , 2026 5 days 85 0
  • கவரத்தியில் நிர்வாகி பிரபுல் படேல் அவர்களால் லட்சத்தீவு 100% கல்வியறிவு பெற்ற ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த சாதனை வயது வந்தோர் கல்விக்கான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமான ULLAS (சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் கற்றல் பற்றிய புரிதல்) - நவ பாரத் சாக்சரதா காரியக்ரம் என்பதன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அடையாளம் காணப்பட்ட 1,113 வயது வந்த படிப்பறிவில்லாத கற்பவர்கள் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் மதிப்பீட்டு தேர்வில் (FLNAT) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • முறையான பள்ளிக் கல்வியைத் தவறவிட்ட 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தோரை உல்லாஸ் திட்டம் இலக்காகக் கொண்டு, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துகிறது.
  • 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வழக்கமான கல்வியறிவு அளவீட்டைப் போலல்லாமல், இந்த சாதனை உல்லாஸ் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட தகுதியான கற்பவர்களின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்