TNPSC Thervupettagam

உள்கட்டமைப்புத் திட்டம் - கிரேட் நிக்கோபார் தீவு

February 21 , 2026 2 days 21 0
  • தேசியப் பசுமை தீர்ப்பாயம் (NGT), சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளுடன் கடுமையான இணக்கத்தை உறுதி செய்யும் அதே வேளையில், கிரேட் நிக்கோபார் தீவு உள் கட்டமைப்புத் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தில் சர்வதேச கண்டெய்னர் பரிமாற்ற முனையம் (ICTT), நகரிய மேம்பாடு மற்றும் 450 MVA எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் சார்ந்த மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும்.
  • மலாக்கா ஜலசந்திக்கு அருகிலுள்ள திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பரவலையும்  NGT குறிப்பிட்டது.
  • தீவுகள் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (ICRZ) அறிவிப்பு, 2019 இன் படி, 16,000க்கும் மேற்பட்ட பவளப்பாறை காலனிகளை இடமாற்றம் செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை பவளப்பாறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.
  • கலாதியா விரிகுடாவில் நேரடித் திட்டப் பகுதிக்குள் பெரிய பவளப்பாறைகள் எதுவும் இல்லை என்பதை தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்