TNPSC Thervupettagam

உள்துறை அமைச்சகத்தின் கீழ் 6 யூனியன் பிரதேச காவல் துறைகள் இணைப்பு

September 29 , 2018 2421 days 727 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது ஆறு யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளை இணைப்பதற்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.
  • இந்த விதிகளானது நேரடியாக இந்திய காவல் பணி (IPS – Indian Police Service) அலுவலராக நியமிக்கப்படாத அதிகாரிகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வரம்பிற்குள் 6 யூனியன் பிரதேசங்களில் எந்தொரு இடத்திலும் பணியமர்த்துவதற்கு வழி செய்கிறது.
  • டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் சண்டிகர் (காவல் பணி) விதிகள் 2018 ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகமானது இதை அறிவித்துள்ளது.
  • இது, ஒரு மத்திய காவல் பணிநிலைப் பிரிவை உருவாக்குவதற்கான முதல் படியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்