உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் குவாண்டம் சீரொளிக் கற்றை
November 18 , 2025 2 days 34 0
இந்தியாவின் முதல் சிறிய உயர் துல்லியத் தன்மை கொண்ட டையோடு லேசரை (சீரோளிக் கற்றை) தேசிய குவாண்டம் திட்டத்தின் (NQM) ஆதரவு பெற்ற பிரீனிஷ்க் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியுள்ளது.
குவாண்டம் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு, குவாண்டம் கணினியியல் மற்றும் மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்த லேசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது நிலையான வெளியீடு, பரந்த அலைநீள வரம்பு, குறைந்த மின் நுகர்வு மற்றும் ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளில் எளிதாக ஒருங்கிணைக்கும் வசதியை வழங்குகிறது.
இந்த கண்டுபிடிப்புக்கு DST-நிதி பிரயாஸ், NMICPS, I-HUB குவாண்டம் தொழில்நுட்ப அறக்கட்டளை, IISER புனே, IIT டெல்லி, BITS BioCyTiH மற்றும் TBI-KIET ஆகியவை ஆதரவளித்தன.