உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்டெலைட் பீச்சுக் குழல் முனை
July 18 , 2025 8 days 50 0
PSLV ஏவு கலத்தின் நான்காவது கட்டத்திற்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்டெலைட் (KC20WN) உலோகக் கலவையிலான உந்துவிசை பீச்சுக் குழாய் முனையினை இஸ்ரோ வெற்றிகரமாக சோதித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கொலம்பியம் (C103) கூற்றினை மாற்றுவதன் மூலம் தயாரிக்கப் பட்ட இது 90% செலவுக் குறைப்பை எட்ட உதவியது.
விரிநிலை முனை என்பது ஒரு ஏவு கல இயந்திரத்தின் விரிவடைந்த பகுதியாகும் என்ற நிலையில் இது உந்துதலை உருவாக்குவதற்காக வெளியேற வாயுக்களை துரிதப்படுத்துகிறது.
விரிநிலை முனையானது உந்துதலின் திசை மற்றும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதோடு இது மேலெழும்பும் போது ஏவுகலத்தினை நிலைப்படுத்துவதற்கும் வழி நடத்துவதற்கும் முக்கியமானது.
ஏவுகலச் செயல்பாட்டின் போது இது அதிகப்படியான வெப்ப (பெரும்பாலும் 1100 டிகிரி செல்சியசை விட அதிகம்) மற்றும் இயந்திர அழுத்தத்தை எதிர் கொள்கிறது.
முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட ஓர் மிக அரிய, வெப்ப-எதிர்ப்பு திறன் கொண்ட ஒரு உலோகமான கொலம்பியம் (C103) ஆனது PSLV கலத்தின் நான்காவது நிலையின் முனையில் பயன்படுத்தப் பட்டது.
ஸ்டெலைட் (KC20WN) என்பது குரோமியம், நிக்கல், டங்ஸ்டன் மற்றும் இரும்பு ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட கோபால்ட் அடிப்படையிலான கலவையாகும்.
இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் அமைந்த இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இது விலையுயர்ந்த இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் நிலையை நீக்குகிறது மற்றும் கொலம்பியம் அடிப்படையிலான முனைகளுடன் ஒப்பிடும்போது இது சுமார் 90% வரை செலவுச் சேமிப்பை வழங்குகிறது.