உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை – 2021
May 24 , 2021 1532 days 846 0
2021 ஆம் ஆண்டு உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கையினை உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையமானது வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் 40.5 மில்லியன் எண்ணிக்கையில் புதிய உள்நாட்டு இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இதுவே உயர்ந்தபட்ச வருடாந்திர பதிவாகும்.
இவை உலகளவில் பேரிடர்களாலும் வன்முறைகளாலும் தூண்டப்பட்டுள்ளன.
9.8 மில்லியன் இடம்பெயர்வுகள் மோதல் மற்றும் வன்முறைகளால் தூண்டப் பட்டவை ஆகும்.
கடந்த ஆண்டில் பேரிடரால் ஏற்பட்ட 30.7 மில்லியன் இடப்பெயர்வுகளில் கிட்டத்தட்ட அனைத்துமே வானிலை சார்ந்த நிகழ்வுகளால் தூண்டப்பட்டுள்ளன.
புயல்கள் மற்றும் வெள்ளங்கள் ஆகியவையே பெரும்பாலான இடப்பெயர்வுகளுக்கும் காரணமாக இருந்தன.
2020 ஆம் ஆண்டின் மே மாதத்தில் கிழக்கு இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் கரையைக் கடந்த அம்பன் புயலானது வங்காளதேசம், இந்தியா, பூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் முழுவதும் கிட்டத்தட்ட 5 மில்லியன் இடப்பெயர்வுகளைத் தூண்டியுள்ளது.