உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கை - 2020
May 4 , 2020 1823 days 831 0
இது உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த மையம் நார்வே அகதிகள் மன்றத்தின் ஒரு பகுதியாகும்.
தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் வெப்ப மண்டலப் புயல்கள் மற்றும் பருவமழை காரணமாக பெரும்பாலான பேரழிவு காரணமான இடப்பெயர்வுகள் தூண்டப் பட்டுள்ளன.
வங்கதேசம், சீனா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை தலா நான்கு மில்லியனுக்கும் அதிகமான இடப்பெயர்வுகளை 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளன.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் - இதுவரையில் உலகிலேயே இதுவே அதிக எண்ணிக்கையாகும்.
2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 1901 ஆம் ஆண்டு முதல் ஏழாவது மிக வெப்பமான ஆண்டாகும்; 2019 ஆம் ஆண்டின் பருவமழை 25 ஆண்டுகளில் இதன் அதிகமான பருவமழையாகும்.
2019 ஆம் ஆண்டில் எட்டு வெப்பமண்டலப் புயல்களும் இந்தியாவைத் தாக்கின.