உள்நாட்டு எரிவாயு எதிர்கால விலையின் மீதான வர்த்தகம்
April 6 , 2026 152 days 224 0
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (SEBI) இந்தியாவின் முதல் உள்நாட்டு அளவுகோல் அடிப்படையிலான இயற்கை எரிவாயு எதிர்கால விலையின் மீதான வர்த்தகத்தைத் தொடங்க, தேசியப் பங்குச் சந்தைக்கு (NSE) அனுமதி வழங்கி உள்ளது.
இவை இந்திய எரிவாயுப் பரிமாற்றகத்தால் (IGX) உருவாக்கப்பட்ட GIXI (இந்திய எரி வாயு குறியீடு) உடன் இணைக்கப்பட்டுள்ளன.
எரிவாயு எதிர்கால விலையின் மீதான வர்த்தகம் என்பது வாங்குபவர்களும் விற்பனையாளர்களும் எதிர்கால விநியோகத்திற்காக ஒரு குறிப்பிட்ட விலையில் முன் கூட்டியே உடன்படும் ஒப்பந்தங்களாகும்.
இது உலகளாவிய மற்றும் உள்நாட்டு எரிவாயு விலைகளுக்கு இடையிலான வேறுபாட்டினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
இது எரிவாயு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய விலையைப் பெற உதவும்.
இந்தியா தனது மொத்த எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கினை தற்போதுள்ள 7%-லிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 15%-ஆக உயர்த்த இலக்கு வைத்து உள்ளது.