TNPSC Thervupettagam

உள்நாட்டு சுற்றுலா அறிக்கை - NSO

October 2 , 2026 5 days 65 0
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலா குறித்த தனது 80வது சுற்று அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டது.
  • இரவு தங்கும் பயணங்களில் புனித யாத்திரை மற்றும் மத வழிபாட்டுப் பயணங்கள் சுமார் 48% உடன் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன, இதைத் தொடர்ந்து சுகாதாரம் மற்றும் மருத்துவப் பயணங்கள் சுமார் 30% ஆக உள்ளன.
  • உள்நாட்டுப் பயணங்களில் சுகாதாரம் மற்றும் மருத்துவப் பயணம் மிகவும் விலையுயர்ந்த பிரிவாக இருந்தது, அதே சமயம் ஷாப்பிங் இரண்டாவது அதிக செலவினப் பிரிவாக இருந்தது.
  • நகர்ப்புறக் குடும்பங்களை விட, கிராமப்புறக் குடும்பங்கள் 100 குடும்பங்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான இரவு தங்கும் மருத்துவப் பயணங்களை மேற்கொண்டு உள்ளன.
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் இரண்டிலும் மருத்துவப் பயணங்களுக்கு வாடகை வாகனங்களே மிகவும் பொதுவான போக்குவரத்து முறையாக இருந்தன.
  • 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இரவு தங்கும் சுகாதாரம் மற்றும் மருத்துவப் பயணங்களில் 32.3% பங்கைக் கொண்டுள்ளனர்.
  • உள்நாட்டு இரவு தங்கும் பயணம், பயணத்தின் நோக்கங்கள், செலவினம், போக்குவரத்து முறைகள் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற பயண முறைகள் குறித்த தரவுகளை இந்த அறிக்கை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்