உள்நாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும் ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு
June 18 , 2021 1490 days 522 0
இந்தியா மற்றும் குவைத் ஆகியவை சமீபத்தில் உள்நாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பான ஒத்துழைப்பு மீதான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய உள்நாட்டு தொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களை சட்டரீதியிலான கட்டமைப்பிற்குள் கொண்டு வரும்.
இது சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பினை வழங்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்திய தூதகர் சிபி ஜியார்ஜ் மற்றும் குவைத் நாட்டின் வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் மஜ்தி அஹ்மத் அல் தஃபீரி ஆகியோரினால் கையெழுத்திடப் பட்டது.