TNPSC Thervupettagam

உள்நாட்டு பேரிடர் எச்சரிக்கை அமைப்பு

September 14 , 2026 15 hrs 0 min 13 0
  • தொலைத்தொடர்பு அமைச்சகமானது, இந்தியாவின் உள்நாட்டு அலைபேசி ஒளிபரப்பு அமைப்பை (CBS) அதன் முதல் பெரிய அளவிலான தேசிய செயல் விளக்கத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது.
  • தொலைபேசி எண்கள், இணையம், செயலிகள் அல்லது பதிவு போன்ற எவ்விதத் தேவையும் இல்லாமல், கோடிக்கணக்கான அலைபேசிகளுக்கு ஒரே நேரத்தில் புவி-சார்ந்த அவசரகால எச்சரிக்கைகளை CBS அனுப்புகிறது.
  • இது சச்செட் (SACHET - தேசிய பேரிடர் எச்சரிக்கை தளம்) அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம், சுனாமி, எரிவாயு கசிவுகள் மற்றும் பிற அவசர காலங்களுக்கான எச்சரிக்கைகளை இதனால் வழங்க முடியும்.
  • தொலைத்தொடர்புத் துறை (DoT), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆகியவற்றுடன் இணைந்து தொலைத் தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) இந்த அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • ஜப்பானின் ஜே-அலர்ட் மற்றும் அமெரிக்காவின் வயர்லெஸ் எமர்ஜென்சி அலர்ட்ஸ் ஆகியவற்றைப் போன்று, CBS அமைப்பைப் பயன்படுத்தும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்