TNPSC Thervupettagam

உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து மசோதா, 2021

August 6 , 2021 1470 days 625 0
  • 2021 ஆம் ஆண்டு உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து என்ற ஒரு மசோதாவினை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • இது 1917 ஆம் ஆண்டு உள்நாட்டு கப்பல் போக்குவரத்துச் சட்டத்திற்கு மாற்றாக அமல்படுத்தப் படும்.
  • இந்த மசோதா நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வழங்க முனைகிறது.
  • இது ஒரு மின்னணுத் தளத்தில் கப்பல் குறித்த தகவல்கள், அதன் பதிவு மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு மைய தரவுத் தளத்தினை வழங்குகிறது.
  • கப்பல்கள், படகுகள், பாய்மரக் கப்பல்கள், கொள்கலன் ஏந்திச் செல்லும் கப்பல்கள் மற்றும் பயணப் படகுகள் உள்ளிட்ட இயந்திரமயமாக்கப் பட்ட உள்நாட்டுக் கப்பல்களுக்கான வரையறையை இம்மசோதா வழங்குகிறது.
  • உள்நாட்டு நீர்நிலைகளில் கப்பல்களை இயக்குவதற்கு என்று அனைத்துக் கப்பல்களும் ஆய்வுச் சான்றிதழ் மற்றும் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.
  • அவசரகாலத் தயார்நிலை, மாசுக் கட்டுப்பாடு மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு  நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் மேம்பாட்டு நிதி உருவாக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்