உள்நாட்டுச் சிறு அளவிலான மீன்வளத்திற்கான தேசியச் செயல் திட்டம்
October 26 , 2026 14 hrs 0 min 39 0
சிறந்த வாழ்வாதாரம், வள மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சிறு அளவிலான உள்நாட்டு மீன்வளத்திற்கான தேசியச் செயல் திட்டத்தின் (NPOA) மேம்பாட்டுக் கட்டத்தில் இந்தியா நுழைந்துள்ளது.
இந்தத் திட்டமானது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) கட்டமைப்பின் கீழ், மீன்வளத் துறையால் BOBP-IGO (வங்காள விரிகுடா திட்டம் அரசுகளுக்கிடையேயான அமைப்பு) உடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.
தற்போதைய ஆண்டு உற்பத்தியான 19.7 மில்லியன் டன்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 மில்லியன் டன்கள் மீன் உற்பத்தியை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
ஆறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள், குளங்கள் மற்றும் குளிர்ந்த நீர் அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தியில் உள்நாட்டு மீன்வளம் சுமார் முக்கால்வாசி பங்களிக்கிறது.
இத்திட்டம் மீன்பிடி உரிமைகள், வள மேலாண்மை, கண்ணியமான வேலை, பாலின சமத்துவம், மதிப்புச் சங்கிலிகள், அறுவடைக்குப் பிந்தைய வர்த்தகம், பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயங்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும்.