உள்நாட்திலேயே உற்பத்தி செய்யப்பட்ட அதிவேக விமான உயிரி எரிபொருளில் இயங்கிய IAFன் விமானம்
February 3 , 2020 2103 days 730 0
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 10% கலவையைக் கொண்ட அதிவேக விமான உயிரி எரிபொருளினால் இயங்கும் AN - 32 விமானத்தை இந்திய விமானப்படையானது வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
விமானத்தின் இரு என்ஜின்களும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட அதிவேக விமான உயிரி எரிபொருளால் இயக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விமானமானது லேஹ் நகரத்தில் உள்ள குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பமானது 2013 ஆம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் - இந்தியப் பெட்ரோலிய நிறுவனத்தினால் (Council of Scientific and Industrial Research- Indian Institute of Petroleum / CSIR-IIP) உருவாக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது எரிபொருள் சோதனைக்காக 2018 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையால் ஆதரிக்கப் பட்டது.
அதிவேக விமான உயிரி எரிபொருளானது உண்ணுவதற்குத் தகுதியற்ற ‘மரத்தினால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்களிலிருந்து’ உற்பத்தி செய்யப் படுகின்றது.
இவை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு, அங்கு இருந்து வாங்கப்படுகின்றன.