உள்ளக குறைதீர்ப்புத் திட்டம் (Internal Ombudsman - IO) 2018
September 5 , 2018 2588 days 915 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, 10க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட பட்டியலிடப்பட்ட வங்கிகளை, உள்ளக குறைதீர்ப்பாளரை நியமிக்க கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து மண்டல ஊரக வங்கிகளுக்கும் அதன் உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறைதீர்ப்பாளர் என்பவர், உரிமை மீறல்கள் அல்லது பொதுமக்களின் புகார்களை தீர்ப்பதற்கும் அவற்றை விசாரிப்பதற்கும் நியமிக்கப்படும் அதிகாரம் கொண்ட நபராவார்.
இந்த IO-2018 திட்டத்தின் அமல்படுத்துதலானது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மேற்பார்வைக்கு அப்பாற்பட்டு வங்கியினுடைய உள்ளக தணிக்கை முறையைக் கொண்டு கண்காணிக்கப்படும்.