உள்ளார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனக் கொள்கை 2025–26
January 11 , 2026 15 days 145 0
சென்னையில் நடைபெற்ற UmagineTN 2026 நிகழ்வில் இந்தியாவின் முதல் பிரத்யேக உள்ளார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனக் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இந்தக் கொள்கைக்கான முதன்மை அமலாக்க நிறுவனமாக iTNT மையம் செயல்படும்.
இந்தக் கொள்கை 100 உள்ளர்ந்தத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதையும், பொது மற்றும் தனியார் முதலீடுகளில் 100 கோடி ரூபாய் நிதி திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலிருந்து 10 தொழில் நுட்பப் பரிமாற்றம் அல்லது உரிம ஒப்பந்தங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், எந்திரவியல் மற்றும் உயிரி தொழில் நுட்பம் போன்ற உள்ளர்ந்த தொழில்நுட்பப் பகுதிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்க இந்தக் கொள்கை திட்டமிட்டு உள்ளது.