ஊசியின்றி நாசி வழி உட்செலுத்தக் கூடிய இந்தியாவின் முதலாவது கோவிட்-19 தடுப்பூசி
September 10 , 2022 976 days 532 0
பாரத் பயோடெக் நிறுவனமானது ஊசியின்றி நாசி வழி உட்செலுத்தக் கூடிய இந்தியாவின் முதலாவது கோவிட்-19 தடுப்பூசிக்கான அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) இனக் கலப்பு நாசிவழித் தடுப்பூசி என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசியின்றி நாசி வழி உட்செலுத்தக் கூடிய தடுப்பூசியினை வழங்குவதற்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அவசரகாலப் பயன்பாட்டிற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகியவை இயல்பில் நரம்பு வழியே உட்செலுத்தக்கூடிய தடுப்பூசிகள் ஆகும்.