இந்திய வானிலை ஆய்வுத் துறையானது (IMD) புயல் ஆயத்த நிலையை மேம்படுத்துவதற்காக ஊடாடும் வகையிலான புயல் எச்சரிக்கை மற்றும் கடல்சார் வானிலை சேவைகள் முடிவு ஆதரவு அமைப்பை (DSS) தொடங்கியுள்ளது.
இந்தத் தளமானது புயல் தடங்கள், காற்றின் வேகம், மழைப்பொழிவு எச்சரிக்கைகள் மற்றும் புயல் எழுச்சித் தகவல் ஆகியவற்றைக் காண்பிக்கும் வலைத்தளப் புவியியல் தகவல் அமைப்பாகும் (WebGIS).
இது பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இருப்பிடம் சார்ந்த எச்சரிக்கைகளை வழங்குகிறது.
இது வெளியேற்ற திட்டமிடல், சரியான நேரத்தில் முடிவெடுத்தல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது.
இதன் வெளியீடானது பைலின் (2013) மற்றும் ஹுத்ஹுத் (2014) புயல்கள் கரையை கடந்ததன் ஆண்டு நிறைவு நாட்களுடன் ஒத்துப்போகிறது