வடகிழக்குப் பிராந்திய இரயில்வே (NFR) நிர்வாகமானது, இரயில் தண்டவாளங்களுக்கு அருகில் வரும் யானைகளைப் பாதுகாக்க ஊடுருவல் கண்டறிதல் அமைப்பை (IDS) அறிமுகப்படுத்தியுள்ளது.
யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிய ஒளியிழை உணர்வுக் கருவிகளைப் பயன்படுத்துகின்ற இந்த அமைப்பு ஆனது இரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
இந்த சோதனை நிறுவல்களில் நான்கு இரயில்வே பிரிவுகளில் 64.03 கி.மீ. நீள யானை வழித்தடங்களும் 141 கி.மீ நீள தொகுதிப் பிரிவுகளும் அடங்கும்.
அடுத்த கட்டமாக IDS ஆனது 146.4 கிமீ யானை வழித்தடங்களுக்கு விரிவுபடுத்தப்படும், மேலும் இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்படுத்தப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.