TNPSC Thervupettagam

ஊட்டச்சத்துக் கணக்கெடுப்பு அறிக்கை

July 8 , 2025 6 days 53 0
  • 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளின் வீட்டு நுகர்வு செலவுக் கணக்கெடுப்பு (HCES) ஆனது இந்தியா முழுவதுமான உணவு உட்கொள்ளுதல் குறித்தத் தரவுகளைச் சேகரித்தது.
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கு மற்றும் ஒரு நுகர்வோருக்கு சராசரி கலோரி, புரதம் மற்றும் கொழுப்பு உட்கொள்ளலை இந்த அறிக்கையானது காட்டுகிறது.
  • கிராமப்புற இந்தியாவின் சராசரி தினசரி கலோரி உட்கொள்ளல் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 2233 கிலோகலோரியாகவும், 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 2212 கிலோ கலோரியாகவும் இருந்தது.
  • நகர்ப்புற இந்தியாவின் சராசரி தினசரி கலோரி உட்கொள்ளல் 2022-23 ஆம் ஆண்டில் 2250 கிலோ கலோரியாகவும், 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 2240 கிலோ கலோரியாகவும் இருந்தது.
  • 2022-23 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை கிராமப்புறங்களில் மிகக் குறைந்த நிலையில் இருந்த ஐந்து குழுக்களுக்கும், நகர்ப்புறங்களில் மிகக் குறைந்த நிலையில் உள்ள ஆறு குழுக்களுக்கும் கலோரி உட்கொள்ளல் அதிகரித்துள்ளது.
  • இரண்டு ஆண்டுகளிலும் முக்கிய மாநிலங்களுக்கிடையில் கலோரி உட்கொள்ளலில் பெரிய வேறுபாடுகள் பதிவாகியுள்ளன.
  • அதிக மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் (MPCE) பதிவாகியுள்ளதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவிலும் கலோரி உட்கொள்ளல் அதிகரிக்கிறது.
  • கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஊட்டச்சத்து பெறல் குறித்து நன்கு புரிந்து கொள்ள உதவும் வகையில் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் (NSO) இந்த அறிக்கையை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்