பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையானது 2019-20 ஆம் ஆண்டிற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான ஊட்டச்சத்தை
(Nutrient Based Subsidy - NBS) அடிப்படையாகக் கொண்ட மானியத் தொகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது உரத் துறையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
NBS செயல்முறையின் கீழ், பின்வரும் ஊட்டச்சத்துகளுக்கு அவற்றின் ஒரு கிலோ கிராம் எடையின் அடிப்படையில் வருடாந்திர மானியம் நிர்ணயிக்கப்பட விருக்கின்றது.
நைட்ரஜன் (N)
பாஸ்பேட் (P)
பொட்டாஷ் (K)
சல்பர் (S)
போரான் மற்றும் துத்தநாகம் போன்ற பிற நுண் ஊட்டச்சத்துகளுடன் கூடிய உரங்களின் எந்தவொரு வகையும் தனிப்பட்ட மானியத்திற்குத் தகுதியுடையதாகும்.
இது உரங்கள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான பொருட்களுக்கான விநியோக ஒப்பந்தங்களை முறைப்படுத்த உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஆகியோரை அனுமதிக்கும். மேலும் இது 2019-20 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்கின்றது.