ஜம்முவிலுள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (IIIM – Jammu) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை இரண்டும் இணைந்து, நறுமண (அரோமா) திட்டத்தின் கீழ் ஊதாப் புரட்சியின் இரண்டாம் கட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜம்முவிலுள்ள தோடாவில் அடைந்த முதல் கட்டத்தின் வெற்றியை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊதாப் புரட்சியின் கீழ், தோடா மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் வருமானம், சோள உற்பத்தியிலிருந்து லாவெண்டர் சாகுபடிக்கு மாறியதன் மூலம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
முதல்முறையாக அதனைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலவசமாக லாவெண்டர் செடிகள் வழங்கப் பட்டன.
இதற்கு முன்பு லாவெண்டர் சாகுபடி செய்தவர்களுக்கு ஒரு செடிக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை வசூலிக்கப்பட்டது.
விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஜம்மு IIIM நிறுவனத்திடமிருந்து உதவியினைப் பெறுவர்.
விவசாயிகள் லாவெண்டர் எண்ணெய்யைப் பிரித்தெடுப்பதற்காக தோடாவில் CSIR நிறுவனம் – ஜம்மு IIIM நிறுவனம் ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ள நான்கு வடிகலன் தொழிற்சாலைக்குத் தாங்கள் சாகுபடி செய்த லாவெண்டர்களை கொண்டு செல்வதற்கான உதவியினைப் பெறுவர்.
தற்போது, பெரிய அளவிலான லாவெண்டர் சாகுபடியானது ஜம்மு & காஷ்மீரில் மட்டுமே செய்யப் படுகிறது.
இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநில அரசுகள் லாவெண்டர் சாகுபடியை மேற்கொள்ளுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றன.
ஊதா பொருளாதாரம்
லாவெண்டர் எண்ணெய் லிட்டருக்குக் குறைந்தது ரூ.10,000க்கு விற்பனை செய்யப் படுகிறது.
லாவெண்டர் நீரானது லாவெண்டர் எண்ணெயிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட இயலும்.
இது வாசனைப் பத்திகளை (குச்சிகளை) தயாரிக்கப் பயன்படுகிறது.
வடிகலன்கள் மூலம் பூக்களிலிருந்து ஹைட்ரோசால் உருவாகிறது.
இது சோப்புகள் மற்றும் அறையின் வாசனை ஆகியவற்றினை மேம்படுத்தும் பொருட்கள் (room freshners) ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
குறிப்பு
2016 ஆம் ஆண்டில், நறுமணமுடன் கூடிய மருத்துவக் குணமிக்க தாவர எண்ணெயினைத் தயாரிப்பதற்கு வேண்டி அத்தாவரங்களின் சாகுபடியை அதிகரிப்பதற்காக அரோமா மிஷன் (நறுமணத் திட்டம்) எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.