TNPSC Thervupettagam

ஊதி பெரிதாக்கும் விண்வெளி வாழ்விடம்

January 31 , 2026 13 days 94 0
  • இந்தியப் புத்தொழில் நிறுவனமான ஆகாஷ்லப்தி, 'அந்தரிக்ஸ்ஹேப்' (AntarikshHAB) எனப்படும் நாட்டின் முதல் காற்றடைக்கும்/ ஊதி பெரிதாக்கும் விண்வெளி வாழ்விடத்தை வெளியிட தயாராகி வருகிறது.
  • இந்தத் திட்டம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) ஆதரவளிக்கப் பட்டு வருகிறது.
  • AntarikshHAB ஆனது ஒரு சிறிய தொகுதியை விண்வெளியில் செலுத்தி, அதை விரிவடையச் செய்ய அனுமதிக்கிறது என்ற நிலையில் இதன் மூலம் பயன்படுத்தக் கூடிய வசிப்பிடத்தின் பரப்பளவு 70 கன மீட்டரிலிருந்து இறுதி வடிவத்தில் 300 கன மீட்டராக அதிகரிக்கிறது.
  • இந்தச் சோதனைகளில், அழுத்தம், கசிவு, வெப்பச் சுழற்சி, தாக்கம் மற்றும் நிலை நிறுத்தல் சோதனைகள் அடங்கும் என்பதால் இதன் மூலம் தொழில்நுட்பத் தயார் நிலை எனபது நிலை 6-ஐ அடைந்து, தொடர்புடைய சூழலில் அமைப்பின் சரிபார்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
  • ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த PLD ஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம், ஜூலை 2026-ல் செலுத்தப்பட உள்ள இதில் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்பாதை விலகல் மற்றும் வளிமண்டல மறு நுழைவு சோதனைகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்