புதிய ஊரக வேலைவாய்ப்பு கட்டமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட 318 பணிகளின் இடைக் காலப் பட்டியலை இந்திய அரசு அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA, 2005) மாற்றாக, 'விக்சித் பாரத் – ரோஸ்கார் மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமப்புறம்) உத்தரவாதச் சட்டம், 2025'-இன் கீழ் இக்கட்டமைப்பு 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் செயல்படுத்தப் படும்.
புதிய முறையானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 100 நாட்களுடன் ஒப்பிடுகையில், ஒரு ஊரகக் குடும்பத்திற்கு ஆண்டிற்கு 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்கிறது.
இந்த 318 பணிகளானது நீர் பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, ஊரக வாழ்வாதாரம் மற்றும் பேரிடர் தணிப்பு பணிகள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் தொகுக்கப் பட்டு உள்ளன.
இது உள்ளூர் மட்டத்தில் முதன்மைத் திட்டமிடல் கருவியாக 'விக்சித் கிராமப் பஞ்சாயத்து திட்டத்தை' பயன்படுத்தி, "ஒற்றைத் திட்டம் – பன்முக நிதி" மாதிரியை அறிமுகப் படுத்துகிறது.