ஊழலைத் தடுப்பதிலும், ஊழல் குற்றங்களை வெளிக் கொணர்வதிலும் அதனை எதிர்த்துப் போரிடுவதிலும் தங்களது தலைமைத்துவம், தைரியம் மற்றும் தாக்கத்தை வெளிப்படுத்திய 12 புதிய ஊழல் தடுப்பு நாயகர்களின் பெயர்களை சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் மற்றும் ஜனநாயக உச்சி மாநாட்டினை முன்னிட்டு இவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் நடத்தப்பட்ட ஜனநாயக உச்சி மாநாட்டின் மத்திய கருத்துரு ஊழல் எதிர்ப்பு என்பதாகும்.