இந்த அறிக்கையானது 1995 ஆம் ஆண்டு முதலாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்னும் நிறுவனத்தால் தயாரித்து வெளியிடப்படுகின்றது.
12 கணக்கெடுப்புகளிலிருந்து உலகெங்கிலும் உள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்ற இது ஒரு கூட்டு அறிக்கையாகும்.
இது பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் ஊழலின் அளவுகளைப் பொறுத்து 180 நாடுகளையும் பிராந்தியங்களையும் வரிசைப்படுத்துகின்றது.
இது பூஜ்ஜியத்திலிருந்து 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகின்றது. இதில் பூஜ்ஜியம் மிக அதிகமான ஊழல் நிறைந்ததாகவும் 100 ஊழலற்ற தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
2018 ஆம் ஆண்டில் 78வது இடத்திலிருந்த இந்தியாவானது தற்போது 41 மதிப்பெண்களுடன், 80வது இடத்தில் உள்ளது.
இந்தத் தரத்தை சீனா, பெனின், கானா மற்றும் மொராக்கோவும் பகிர்ந்து கொள்கின்றன.
டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தையும், பின்லாந்து, சிங்கப்பூர், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களையும் பிடித்துள்ளன.