எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பைத் (Steel Import Monitoring System – SIMS) மத்திய வர்த்தக & தொழில் துறை மற்றும் ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் தொடங்கினார்.
இது அமெரிக்க எஃகு இறக்குமதி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் மாதிரியின் படி உருவாக்கப்பட்டுள்ளது.
SIMS குறித்த அறிவிக்கை ஒன்று 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றது.
இது திறன் வாய்ந்த கொள்கை இடையீடுகளைக் கொண்டிருப்பதற்காக எஃகு இறக்குமதி குறித்த முன்கூட்டியத் தகவல்களை மத்திய அரசு மற்றும் தொழில் துறை பங்குதாரர்களுக்கு வழங்கும்.
இந்தத் தரவுகள் எஃகு அமைச்சகத்தினால் கண்காணிக்கப்பட இருக்கின்றன.