மலைப்பாங்கான மற்றும் இமயமலைப் பகுதிகளில் சாலை கட்டுமானத்திற்கு எஃகு கசடுகளைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்மொழிந்தார்.
எஃகு கசடு என்பது எஃகு உற்பத்தியில் இருந்து கிடைக்கும் ஒரு தொழில்துறை துணைப் பொருளாகும் என்பதோடுஇது வலுவான மற்றும் நீடித்த சாலைகளை அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் சாலையின் வலிமை, நீர் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது மற்றும் பழுதுபார்க்கும் நேரத்தைக் குறைக்கிறது.
நிலச்சரிவுகள் மற்றும் கனமழைகள் சாலைகளைச் சேதப்படுத்தும் இமயமலை மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
எஃகு கசடுகளைப் பயன்படுத்தி, பயன்படுத்தத் தயாராக உள்ள பள்ளங்கள் பழுது பார்க்கும் கலவையான ECOFIX, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய ஆதரவுடன் CSIR-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
வணிகப் பயன்பாடு மற்றும் நிலையான சாலைகளை உருவாக்க ஆண்டுக்கு 2 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கசடு செயலாக்க மையம் 2027 ஆம் ஆண்டில் அமைக்கப் பட திட்டமிடப்பட்டுள்ளது.