TNPSC Thervupettagam

எஃகு கழிவுத் துகள் மறுசுழற்சிக் கொள்கை 2019

November 17 , 2019 2014 days 614 0
  • மத்திய எஃகுத் துறை அமைச்சகமானது 2019 ஆம் ஆண்டின் எஃகு கழிவுத் துகள் மறுசுழற்சிக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
  • கழிவுத் துகள் வடிவத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட அல்லது மீண்டும் பயன்படுத்தப்பட்ட எஃகு ஆனது இந்திய எஃகு தொழில் துறைக்கு இரண்டாம் நிலை மூலப் பொருளாக விளங்குகின்றது.
  • எஃகு கழிவுத் துகளின் தற்போதைய விநியோகமானது உள்நாட்டு அமைப்புசாரா எஃகு கழிவுத் துகள் தொழிற் சாலையிலிருந்து 25 மில்லியன் டன்களாகவும் எஃகு கழிவுத் துகளின் இறக்குமதியிலிருந்து 7 மில்லியன் டன்களாகவும் விளங்குகின்றது.
  • 2017 ஆம் ஆண்டின் தேசிய எஃகுக் கொள்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆண்டிற்கு 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தித் திறனை உருவாக்குவதன் மூலம் உலகளவில் போட்டிமிக்கதாக எஃகுத் தொழிற் துறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • இது எஃகுக் கழிவுத் துகள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இருக்கின்றது. இது ஆயுட்காலம் முடிந்த வாகனங்களிடமிருந்து இந்திய நகரங்களின் நெரிசலைக் குறைக்கின்றது.
  • இந்தக் கொள்கையானது இந்தியாவில் உலோக எஃகுக் கழிவுத் துகள் மையங்களை நிறுவுவதை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இது சுற்றுச்சூழலின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.
    • இந்தக் கொள்கையானது 6Rகளின் அடிப்படையில் செயல்பட இருக்கின்றது: குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, மீட்பு, மறுவடிவமைப்பு மற்றும் மறு உற்பத்தி.
    • இது பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • மேலும் இது மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட 2016 ஆம் ஆண்டு அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்த இயக்கம்) விதிகளுக்கு இணங்க, எஃகின் மேலுறையை நீக்குதல் மற்றும் துண்டாக்குதல் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கழிவு நீர் மற்றும் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக ஒரு நெறிமுறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்