எஃகுத் தொழிற்சாலைக் கழிவைக் கொண்டு அமைக்கப்பட உள்ள சாலை -அருணாச்சலப் பிரதேசம்
August 19 , 2022 1095 days 517 0
எல்லைச் சாலைகள் அமைப்பானது அருணாச்சலப் பிரதேசத்தில் எஃகுத் தொழிற் சாலைக் கழிவைக் கொண்டு போடப்பட்ட ஒரு சாலையை ஒரு முன்னோடித் திட்ட அடிப்படையில் அமைக்க உள்ளது.
எஃகுத் தொழிற்சாலைக் கழிவைக் கொண்டு அமைக்கப்பட உள்ள இந்தச் சாலை என்பது இந்தியாவிலேயே இது போன்ற முதல் வகை திட்டமாக இருக்கும்.
கனமழை மற்றும் கடுமையானப் பருவநிலைகளைத் தாங்கும் ஆற்றலை இவைக் கொண்டிருக்கும்.
ஆபத்து மிக்கப் பகுதிகளில் உள்ள உத்தி சார்ந்த இடங்களில் நீண்ட காலம் நிலைக்கக் கூடியச் சாலைகளை அமைப்பதற்கானச் சாத்தியமான தீர்வுகளை ஆராய்வதற்காக இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப் படுகிறது.