எகானா கிரிக்கெட் மைதான பெயர் மாற்றம் - அடல் பிகாரி வாஜ்பாய்
November 10 , 2018 2371 days 752 0
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவிற்குப் பின்பு உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள எகானா கிரிக்கெட் மைதானத்தின் பெயரை மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குப் பிறகு இந்த மைதானம் “பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்” என்றழைக்கப்படும்.
இந்த மைதானம் தனது முதல் சர்வதேச போட்டியாக இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையே நடைபெற்ற T-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது.