எகிப்தின் செங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு பழங்காலத் துறைமுக நகரமான பெரெனிகேயில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை (TNSDA) இணைந்துள்ளது.
தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையிலான பண்டைய வர்த்தக தொடர்புகளுக்கான ஆதாரங்களை அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும்.
1995 ஆம் ஆண்டு பெரெனிகேயில் நடைபெற்ற முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் கொரபுமான் என்ற தமிழ்-பிராமி எழுத்தினைக் கொண்ட ஒரு மட்பாண்ட ஓடு கண்டெடுக்கப் பட்டது.
குசைர் அல்-காதிம் உள்ளிட்ட பிற செங்கடல் தளங்களில், கானன் மற்றும் கேட்டன் போன்ற நூல்களுடன் தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப் பட்டன.