TNPSC Thervupettagam

எகிப்தில் பதனிடப்பட்ட வாலில்லாப் பெருங்குரங்குச் சடலம்

April 18 , 2024 14 days 48 0
  • 1900 ஆம் ஆண்டுகளில், நைல் நதிக்கரையில் உள்ள கபனாட் எல்-குருத் (குரங்குகளின் பள்ளத்தாக்கு) என்ற இடத்தில் பதனிடப்பட்ட வாலில்லாப் பெருங்குரங்குச் சடலங்கள் கண்டறியப் பட்டன.
  • அறிஞர்கள் இங்கு ஆச்சரியப் படும் விதமாக வாலில்லாப் பெருங்குரங்கு இனங்களின் 17 மண்டை ஓடுகள் மற்றும் பெரிய அளவிலான எலும்புகளை கண்டெடுத்தனர்.
  • பதனிடப்பட்ட சடலங்களாக  கண்டறியப்பட்ட குரங்குகள் பாபியோ அனுபிஸ் மற்றும் பாபியோ ஹமத்ரியாஸ் ஆகிய இனங்களாகும்.
  • அவை உண்மையில் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதி மற்றும் தென்மேற்கு அரேபிய தீபகற்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவை.
  • மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவைப் பயன்படுத்துவதன் மூலம், இவை இன்றைய கடலோர எரித்திரியாவில் உள்ள பண்டைய நகரமான அடுலிஸ் என்ற பகுதிகளைச் சேர்ந்தவை என்று கண்டறிய முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்