சர்வதேச பணியிடக் குழுவால் (IWG) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான எங்கிருந்தும் பணி புரியும் குறியீட்டில் 77 புள்ளிகளுடன் சேர்க்கப்பட்ட ஒரே இந்திய நகரம் மும்பை ஆகும்.
உலகளவில் மும்பை 50-வது இடத்தைப் பிடித்தது மற்றும் போக்குவரத்துச் செலவுகள், தங்குமிடம், பருவநிலை மற்றும் நெகிழ்வான பணியிட வசதி ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டது.
பிராட்பேண்ட்/அகலப்பட்டை வேகம் மற்றும் தரம், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் மகிழ்ச்சிக் குறியீடு ஆகியவற்றில் இது குறைவான மதிப்பெண்களைப் பெற்றது.
பாங்காக் 106.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டோக்கியோ (96.5) மற்றும் பார்சிலோனா (95.5) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இந்தக் குறியீடு பருவநிலை, பிராட்பேண்ட்/அகலப்பட்டை இணைப்பு, தங்குமிடம், போக்குவரத்து, உணவு, கலாச்சாரம் மற்றும் நெகிழ்வான பணியிட வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்கிறது.
குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்ட் நிறுவனத்தின் தரவுகளின்படி, நெகிழ்வான பணியிட முதிர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 100 புள்ளிகளைப் பெற்றுள்ளது.